கிருஷ்ணகிரி: தாயார் திட்டியதால் 9-ஆம் வகுப்பு மாணவன் மாயம் - சிசிடிவி காட்சிகள் வெளியீடு
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் தாயார் திட்டியதால் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய 15 வயது மாணவன் அஸ்வின் மாயமானார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிறுவன் திம்மாபுரம் நோக்கி நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.