பரமக்குடி: சத்தேழு பெரிய கன்னிமார் அம்மன் ஆலய திருவிழாவின் பகுதியான, திருவீதி உலா பிரம்மாண்டமாக நடைபெற்றது
பரமக்குடியில் அமைந்துள்ள சத்தேழு பெரிய கன்னிமார் அம்மன் ஆலய ஆஷாட நவராத்திரி திருவிழா முன்னிட்டு சொர்ண வராகி அம்மன் திருவீதி விழா நடைபெற்றது. சத்தேழு பெரிய கன்னிமார் அம்மன் கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா ஒவ்வொரு ஆண்டும் ஒன்பது நாட்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன.இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி தொடங்கி 9 நாட்களாக 9 அலங்காரத்தில் காட்சி அளித்தார்.பின்னர் ஆஷாட நவராத்திரி நிறைவு நாளான இன்று மின் அலங்காரம் செய்யப்பட்ட தேரில் சொர்ண வராஹி அம்மன் திருவீதி உலா நடந்தது