பெரியகுளம்: பெரியகுளத்தில் 2 மணி நேரமாக கொட்டித் தீர்த்த கனமழை: மகிழ்ச்சியில் மக்கள்!
தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் வடுகபட்டி, தேவதானப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலை பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடும் வெப்பம் தணிந்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.