தூத்துக்குடி: தூத்துக்குடி கடற்கரையில் கரை ஒதுங்கிய 750 கிலோ டால்பின்: மீனவர்கள் அதிர்ச்சி
தூத்துக்குடி துறைமுக கடற்கரையில் 10 அடி நீளமும், 750 கிலோ எடையும் கொண்ட டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. அழுகிய நிலையில் டால்பின் கிடப்பதைக் கண்ட மீனவர்கள், அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர்.