தூத்துக்குடி: தூத்துக்குடியில் அமைச்சர் வன்னியரசு கருத்துக்கு எதிர்ப்பு: புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, அமைச்சர் வன்னியரசுவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய தமிழகம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமூக நீதி விடுதியில் மாட்டுக்கறி வழங்கப்படும் என்ற கருத்தை வாபஸ் பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.