திருப்பூர் தெற்கு: திருப்பூர்: நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - அணைப்பாளையம் தரைப்பாலம் மூழ்கியது
திருப்பூர் நொய்யல் ஆற்றில் 2-வது முறையாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அணைப்பாளையம் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. உயர்மட்ட பாலம் திறக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. மேலும் மங்கலம் அருகே ஆற்றின் நடுவில் உள்ள நல்லம்மன் கோவில் நீரில் மூழ்கியுள்ளது.