வேலூர்: வேலூர் நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை
வேலூர் நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர். லஞ்சப் புகார் காரணமாக நடைபெற்ற இந்த சோதனையில், பணம் அல்லது முக்கிய ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.