திண்டுக்கல் கிழக்கு: பழனி ரோடு கோமத் லாட்ஜிற்கு சூட்டிங்கிற்கு வந்த தனுஷ் சூழ்ந்து கொண்ட ரசிகர்கள்
திண்டுக்கல் மாவட்டம், பழனி ரோட்டில் உள்ள கோமத் லாட்ஜில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் 54-ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகி வருகிறது. மாலை முதலே தனுஷை ஒருமுறை கண்ணால் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஹோட்டலைச் சுற்றி திரண்டனர். கேரவன் செல்வதற்காக வெளியே வந்த தனுஷைப் பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகக் கூச்சலிட்டனர்.