உத்தமபாளையம்: மேகமலை ஆக்கிரமிப்பு விவகாரம்: 4-வது நாளாக தொடரும் மலை கிராம மக்களின் போராட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக நிலங்கள் மீட்பு விவகாரத்தில், தேனி மாவட்ட மக்கள் 4-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வலியுறுத்தி, கடமலைக்குண்டுவில் 5,000-க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.