வாணியம்பாடி: வாணியம்பாடி கல்லூரி மாணவர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் ஆய்வு மேற்கொண்டார். உணவின் தரம், இருப்பு மற்றும் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.