மதுரை கிழக்கு: மதுரை வண்டியூர் 108 ஆண்டு பழமையான அரசுப் பள்ளி: தரம் உயர்த்த பெற்றோர்கள் கோரிக்கை
மதுரை வண்டியூர் மாந்தோப்பு அரசு உயர்நிலைப்பள்ளியின் தரம் மோசமாக இருப்பதாகக் கூறி, பள்ளி பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். பள்ளியில் ஆய்வுக் கூடம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும், மாணவர்களின் வசதிக்காகப் பள்ளியை மேம்படுத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.