அகஸ்தீஸ்வரம்: கன்னியாகுமரியில் சூடான் தம்பதி கைது - 3 குழந்தைகளுடன் புழல் சிறையில் அடைப்பு
கன்னியாகுமரியில் உரிய ஆவணங்கள் மற்றும் விசா இன்றி தங்கியிருந்த சூடான் நாட்டு தம்பதியினர், அவர்களது 3 குழந்தைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இரண்டு முறை திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், மீண்டும் சட்டவிரோதமாக தங்கியிருந்ததால் போலீசார் சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.