வேலூர்: வேலூரில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட பிரதமர் மோடியின் பிறந்தநாள்: பாஜகவினர் சேவை ஜோதி பேரணி
வேலூர் மாவட்டத்தில் பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் சேவை ஜோதி பேரணி நடைபெற்றது. மாவட்ட தலைவர் தசரதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதமர் ஆற்றிய உரை திரையில் ஒளிபரப்பப்பட்டது. இதில் ஏராளமான பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.