திருப்பூர் தெற்கு: திருப்பூர் அரசு மருத்துவமனையில் மது போதையில் வாலிபர் ரகளை - வீடியோ வைரல்
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாயைப் பார்க்க வந்த மகன், மது போதையில் காவலர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டார். இந்து முன்னணி பிரமுகர் என்று கூறி மிரட்டல் விடுத்த அந்த வாலிபரை திருப்பூர் தெற்கு போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.