வாணியம்பாடி: பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீர் - மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பெரிய குரும்பத்தெரு அரசு ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர். தேங்கிய நீரை அகற்றவும், நிரந்தர வடிகால் வசதி செய்யவும் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் சதாசிவம் கோரிக்கை விடுத்துள்ளார்.