திருச்செந்தூர்: செம்மறிகுளம் கஸ்பா பகுதியில் மழை வெள்ள நீரில் மூழ்கிய 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் படகில் சென்று வாழைதார்களை மீட்டு வரும் விவசாயிகள்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில தினங்களாக தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பனையான ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து லட்சக்கணக்கான கன அடி நீர் வீணாக கடலுக்கு சென்றது. அந்த சமயத்தில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் உள்ள தென்கால்வாயில் இருந்து பாசனத்திற்காக குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.