கோவில்பட்டி: குருமலை கோவிலில் திருடிய நபர் கைது
தூத்துக்குடி மாவட்டம் குருமலை கிராமத்தில் உள்ள அலங்காரி அம்மன் மாடசாமி கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவில் பூட்டை உடைத்து தங்க நகைகளை மர்ம நபர் திருடி சென்றார். மேலும் இது தொடர்பாக கொப்பம்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சுரேஷ் என்பவ் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.