பழனி: கரூர் கூட்டத்தில் 41 உயிரிழந்ததற்கு யார் காரணம்? செந்தில் பாலாஜி தான் காரணம் என்பது நாட்டிற்கே தெரியும் பழனியில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
பாரதிய ஜனதா கட்சியின் அணிகளுக்கு புதிய மாநிலத்தலைவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு அவர்களின் அறிமுகக் கூட்டம் திண்டுக்கல் மாவட்டம் பழனி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு அணிகளின் புதிய மாநிலத் தலைவர்கள், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பாஜக அணிகள் உடைய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.