வேலூர்: வேலூர் கோட்டைக்குள் பிணங்களை வைத்து வழிபாடு: தொல்லியல் துறை அலுவலகம் முற்றுகை
வேலூர் கோட்டைக்குள் இருக்கும் தேவாலயத்தில் இறந்தவர்களின் உடல்களை வைத்து வழிபாடு நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் தொல்லியல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது மத மோதல்களை உருவாக்கும் என அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.