ஸ்ரீரங்கம்: திருச்சியில் இருசக்கர வாகனத்தில் குட்கா கடத்தல்: 55 வயது நபர் கைது
திருச்சி திருவானைக்கோவில் பகுதியில் இருசக்கர வாகனத்தில் குட்கா பொருட்களை விற்பனைக்காக எடுத்துச் சென்ற லால்குடியைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரை ஸ்ரீரங்கம் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 4 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.