குடியாத்தம்: வேலூரில் மாநில அளவிலான ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் தொடக்கம்: 600 வீரர்கள் பங்கேற்பு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கியுள்ளன. 38 மாவட்டங்களில் இருந்து 600 வீரர்கள் பங்கேற்கும் இந்தப் போட்டிகள் அக்டோபர் 11 வரை நடைபெறும். வெற்றி பெறும் வீரர்கள் தேசிய அணியில் விளையாடத் தேர்வு செய்யப்படுவார்கள்.