வேலூர்: ஏ.ஐ தொழில்நுட்பம் மனித குலத்தை அழித்துவிடும் - வேலூரில் முன்னாள் டிஜிபி ரவி எச்சரிக்கை
வேலூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி குறித்து முன்னாள் டிஜிபி ரவி பரபரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளார். மனித குலத்திற்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் ஏ.ஐ தொழில்நுட்பம் மாற வாய்ப்புள்ளதால், அதற்கு கட்டுப்பாடுகள் அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.