கொடைக்கானல்: கனமழையால் நிரம்பிய நட்சத்திர ஏரி - தண்ணீர் வெளியேறத் தொடக்கம்!
கொடைக்கானலில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நட்சத்திர ஏரி முழு கொள்ளளவை எட்டி தண்ணீர் வெளியேறுகிறது. கடந்த 5 மணி நேர கனமழையினால் சில இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்துள்ளன. ஏரிச் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால், ஆபத்தான இடங்களைக் கண்காணிக்க கோரிக்கை எழுந்துள்ளது.