தூத்துக்குடி மாவட்டம் இலுப்பையூரணி பஞ்சாயத்திற்கு உட்பட்ட லாயல் மில் காலனி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மத்திய பகுதி திமுக செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் கலந்துகொண்டு மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார் தொடர்ந்து பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயம் வழங்கினார்.