திருப்பத்தூர்: மாயமான 9 சவரன் தங்க நகைகளை மீட்டு தாருங்கள் என எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மனு
கந்திலி அடுத்த பள்ளத்தூர் ஊராட்சி மோட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி மகன் சுந்தரம் வயது 50 இவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தனது மனைவி மற்றும் குழந்தைகளின் 9 சவரன் தங்க நகைகளை வீட்டில் உள்ள பீரோவில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் 26 ஆம் தேதி மீண்டும் பீரோவை திறந்து பார்த்தபோது தங்க நகைகள் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் சுந்தரம் குடும்பத்துடன் புகார் மனு கொடுத்தார்.