விருத்தாசலம்: விருதாச்சலம் பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடி மக்களுக்கு வெற்றிலை பாக்குடன் தேர்தலில் வாக்களிக்க அழைப்பு விடுக்கப்பட்டது
தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு சீர்வரிசையுடன் சென்று வெற்றிலை பாக்கு வைத்து சால்வை அணிவித்து வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி வாக்களிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்படி விருதாச்சலம் நகராட்சிக்குட்பட்ட 85 வயதுக்கு மேற்பட்ட 388 மூத்த குடி மக்களுக்கு சீர்வரிசையுடன் சென்று அழைப்பு விடுக்கப்பட்டது