விளவங்கோடு: கேரளா நவராத்திரி பூஜை நிறைவு: குமரி திரும்பிய சாமி சிலைகளுக்கு உற்சாக வரவேற்பு
திருவனந்தபுரம் நவராத்திரி பூஜையில் பங்கேற்ற சுசீந்திரம், குமாரகோவில் மற்றும் பத்மநாபபுரம் கோயில் சாமி விக்கிரகங்கள் குமரி மாவட்டம் திரும்பின. களியக்காவிளையில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட சாமி சிலைகளுக்கு பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இன்று இரவு குழித்துறை கோயிலில் தங்கும் சிலைகள், நாளை பத்மநாபபுரம் திரும்புகின்றன.