பெரம்பலூர்: பெரம்பலூர் அரசு உதவி பெறும் பள்ளியில் புதிய வகுப்பறைகளை திறந்து வைத்தார் துரை.வைகோ
பெரம்பலூர் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் மாநிலங்களவை உறுப்பினர் வைகோவின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட 3 புதிய வகுப்பறைகளை திருச்சி எம்பி துரை.வைகோ திறந்து வைத்தார். இதற்காக 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.