திருப்பூர் தெற்கு: தெற்கு ரோட்டரி திருமண மண்டபத்தில், காவலர்களுக்கான அஞ்சல் வாக்கு சிறப்பு முகாம் இன்று நடந்தது.
திருப்பூரில் பாராளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் தேர்தல் நாளன்று தங்கள் வாக்கை பதிவு செய்ய முடியாது. எனவே, காவலர்களுக்கான அஞ்சல் வாக்கு சிறப்பு முகாம் தெற்கு ரோட்டரி திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. இந்த முகாமில், திருப்பூரில் பணியிலுள்ள காவலர்கள் தங்களது அஞ்சல் வாக்கினை பதிவு செய்தனர்.