சத்தியமங்கலம்: கூகுள் மேப் வழிகாட்டுதலால் ஆசனூர் அருகே 100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது
மைசூரில் இருந்து சென்னை திரும்பிய 9 பேர், கூகுள் மேப் வழிகாட்டுதலால் ஆசனூர் அருகே கார் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது. ஆசனூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு அவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.