சாத்தான்குளம்: புளியடி தேவி ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா
சாத்தான்குளம் புளியடி தேவி ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் புரட்டாசி திருவிழா கடந்த 26ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இவ்விழாவின் சிகரநிகழ்ச்சியான சுவாமி பூக்குழி இறங்கும் வைபவம் நடந்தது. முன்னதாக கோவிலில் நடந்த பூஜையைடுத்து மூன்று சுவாமிகள் பூக்குழி இறங்கினர். இதில் திரளாக கலந்து கொண்ட பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.