பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது உழவர் சந்தை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த விஜய் மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்தனர். சுற்றி வளைத்து பிடித்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை கைது செய்யப்பட்ட விஜய் மீது பழனி காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது