பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானை: வனத்துறையினர் விரட்டினர்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே குண்டலப்பள்ளி கிராமத்தில் விவசாய நிலத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து காட்டுக்குள் விரட்டினர். தொடர்ந்து இப்பகுதியில் யானை அட்டகாசம் செய்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.