துறையூர்: துறையூர் தம்மம்பட்டி சாலையில் கிருஷ்ணாபுரத்தில் பொதுமக்கள் குடிதண்ணீர் கேட்டு சாலை மறியல்
உப்பிலியபுரம் அருகே கிருஷ்ணாபுரத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகம் தடை பட்டதாக தெரிய வருகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் கூறியும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. ஆத்திரமடைந்த பொதுமக்கள் துறையூர் தம்மம்பட்டி சாலையில் இன்று காலை சுமார் 8 மணி அளவில் சாலையின் நடுவே காலி குடங்களை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்