மானூர்: கூனியூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறை காற்றுடன் கூடிய கனமழையால் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்து சேதம். விவசாயிகள் வேதனை.
கூனியூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறுவடை பருவம் நெருங்கும் வாழைகள் சரிந்து சேதம் ஆகி உள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாய் வரை செலவு செய்து வாழைகளை பயிரிட்டுள்ளோம் தற்போது பலத்த காற்று மழையால் சேதமாகி உள்ளதாக அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் இன்று மதியம் 12:30 மணியளவில் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.