பெரம்பலூர்: போக்சோ மற்றும் குழந்தை திருமண வழக்கில் 9 பேருக்கு 22 ஆண்டுகள் சிறை
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2021-ல் நடந்த போக்சோ மற்றும் குழந்தை திருமண வழக்கில், குற்றவாளிகள் 9 பேருக்கு தலா 22 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 60,000 ரூபாய் அபராதம் விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.