பழனியை அடுத்த சிவகிரிப்பட்டி பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக பழனி டவுன் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் திண்டுக்கல் ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கல்லூரி மேடு பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற 7 பேரை மடக்கி பிடித்தனர். சிவகிரிப்பட்டி தண்ணீர் தொட்டி பகுதியில் நின்று கஞ்சா விற்றதாக 8 பேரை கைது செயதனர்.