விருத்தாசலம்: மங்கலம்பேட்டை பஜனை கோவில் தெருவில் குட்டையில் விழுந்த பசு மாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்
கடலூர் மாவட்டம், விருதாச்சலம் மங்கலம்பேட்டை பஜனை கோவில் தெருவில் உள்ள குட்டையில் பசு மாடு ஒன்று விழந்து உயிருக்கு போராடியது. இது குறித்து 6 வது வார்டு கவுன்சிலர் கோமதி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி பசு மாட்டினை உயிருடன் மீட்டு கவுன்சிலரிடம் ஒப்படைத்தனர்.