விருத்தாசலம்: கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் பெண் தர்ணா போராட்டம்
கொடுக்கூர் கிராமத்தில் தனது கணவரின் உறவினர் பெயரில் உள்ள பட்டாவை அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனக்கு பாத்தியம் உள்ளதாகவும் ₹50,000 பணத்தை கொடுத்துவிட்டு வீடு கட்டுங்கள் என மிரட்டி வருவதாகவும் புகார் தெரிவித்து கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்தினருடன் பெண் தர்ணாவில் ஈடுபட்டார். இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் உறுதியளித்ததன் பேரில் அப்பெண் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்.