திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு, கோவில்குப்பம் சின்னசாமி தெருவில் வசித்து வருபவர் பெயிண்ட்டர் சுகுமார். இவரது மனைவி வத்சலா இந்த தம்பதியினருக்கு லத்தீஷ் என்ற மகனும், ப்ரீத்தி என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் இரவு சமையல் செய்வதற்காக வீட்டில் மண்ணெண்ணெய் ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக ஸ்டவ் வெடித்து வத்சலா உடலில் தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. இதில் வத்சலா 90 சதவீதம் தீ காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி பலியானார்