திருப்பத்தூர்: ஆட்சியர் அலுவலகத்தில் 471 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 56.48 கோடி வங்கி கடன் வழங்கும் விழா - கலெக்டர், எம்எல்ஏக்கள் பங்கேற்பு
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் சிவ செளந்திரவல்லி தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி, ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ், ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.