தென்காசி: தினசரி சந்தை காய்கனி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் காரணமாக பொதுமக்கள் அவதி
தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் 77 கடைகள் நகராட்சி தினசரி சந்தை வளாகத்தில் கட்டப்பட்டு வருகின்றன பணிகள் இன்னும் முழுமை அடையாத நிலையில் இந்த கடைகளை ஏற்கனவே அந்தப்பகுதிகளில் வியாபாரம் செய்து வந்த வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி தினசரி சந்தை காய்கறி வியாபாரிகள் ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்