தமிழகத்திலேயே 73 ஊராட்சிகளை கொண்ட மிகப்பெரிய ஊராட்சி ஒன்றியம் உத்திரமேரூர் ஆகும். இதனால் சுமார் 34 ஊராட்சி சேர்ந்த பொதுமக்கள் தங்களுடைய அரசு சம்பந்தப்பட்ட ஆவணங்களை பெறுவதற்கும் அரசு அதிகாரிகளை பார்ப்பதற்கும் சிரமப்பட்டு வந்தனர் . இதனால் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக சாலவாக்கத்தை தலைமையாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசு அதற்கான அரசாணையை இன்று பிறப்பித்துள்ளது