கோவை வடக்கு: கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடையில் ஆண் சடலம் மீட்பு: போலீஸ் தீவிர விசாரணை!
கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலை சாக்கடையில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்பு. கொலை அல்லது விபத்தா என்ற கோணத்தில் பந்தய சாலை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.