பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் கிழக்குப் பகுதியில் குப்பை கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர். குப்பைகளில் தீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்திருந்ததால் தீம் மல மலவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. சிறிது நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் இருந்த தென்னை மரத்திலும் தீ பற்றி எரியத் துவங்கியது. தென்னை மரம் தீப்பற்றி எரிவதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக பழனி தீயணைப்புத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர்.