வால்பாறை: மழுக்குப்பாறை அதிரப்பள்ளி சாலையில் பழுதாகி நின்ற காரை தாக்கிய காட்டு யானைகள் வீடியோ வைரல்
கேரளா மாநிலம் சாலக்குடி அடுத்து உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதிக்கு அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் மழுக்கபாறை அதிரப்பள்ளி சாலையில் அடிக்கடி காட்டு யானைகள் நடமாட்டம் இருக்கும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அப்பகுதியில் வாகனங்கள் செல்ல கேரளா வனத்துறையினர் அனுமதித்து உள்ளனர். வனவிலங்குகள் பகல் நேரத்தில் சாலையில் நடந்து வாகனங்களை அச்சுறுத்தி வருகின்றன.