தமிழக முன்னாள் முதல்வரும் விடுதலைப் போராட்ட வீரருமான கர்மவீரர் காமராஜ் குறித்து மை இந்தியா என்ற youtube சேனல் தவறான பதிவுகளை பதிவு செய்து வருவதாகவும் இது அவரது களங்கத்திற்கு ஏற்படுத்துவதாக தமிழகம் முழுவதும் நாடார் சங்கங்கள் கன்டனங்களை தெரிவித்து வருகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் வட்டார ஐக்கிய நாடார் சங்கம் , காஞ்சிபுரம் நாடார் பேரவை மேற்கு மாவட்ட சங்க நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று மனு அளித்தனர்.