கோவை வடக்கு: கோவையில் கோலாகலமாக நடைபெற்ற 'பெரியார் வாக்' நடை பேரணி
தந்தை பெரியாரின் 148-வது பிறந்த நாளை முன்னிட்டு, கோவையில் திராவிடர் கழகம் சார்பில் சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கான 'பெரியார் வாக்' நடை பேரணி நடைபெற்றது. வ.உ.சி மைதானத்தில் தொடங்கிய இந்தப் பேரணியை ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் தொடங்கி வைத்தார். நூற்றுக்கணக்கானோர் இதில் பங்கேற்றனர்.