விருத்தாசலம்: கடலூர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில், மக்களுடன் முதல்வர் நிகழ்வில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கலந்துகொண்டு 518 நபர்களுக்கு ₹38.94 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வில் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், நகர்மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், வருவாய் கோட்டாட்சியர் சையத் மெஹ்மூத் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.