திருப்பத்தூர்: கந்திலி பகுதியில் ஆவின் கடை எதிரில் கல்லை கொட்டிய நபர்கள்-போலிசார் விசாரணை
கந்திலி அடுத்த பணந்தோப்பு பகுதியில் பல வருடங்களாக நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான இடத்தில் மோகனா என்பவர் வசித்து வருகின்றார்.இந்நிலையில் அந்த இடத்தில் பீடி சுற்றும் தொழில் செய்யும் அவரது மருமகள் லட்சுமி என்பவருக்கு மகளிர் திட்டம் மூலம் தமிழக அரசு சார்பில் ஆவின் பாலகம் கொடுத்துள்ளனர்.அப்போது அந்த கடைக்கு பின்னால் இருக்கும் நிலத்து உரிமையாளர் பளபளப்பான பாலாகம் மற்றும் பாய்லரை பார்த்ததும் கடைக்கு எதிரில் டிராக்டர் மூலம் கற்களை கொண்டு வந்து கொட்டி உள்ளனர்.இதனால் மனமுடைந்த மூதாட்டி மற்றும் அவரது மருமகள் லட்சுமி ஆகியோர் கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.